இலங்கை முன்னால் இராணுவ வீரர்கள் சங்கத்தால் இராணுவத் தளபதிக்கு பொப்பி மலர் அணிவிப்பு
31st October 2019
இலங்கை முன்னால் இராணுவ் வீரர்கள் சங்கத்தால் எதிர்வரும் பொப்பி மலர் தினத்தைமுன்னிட்டு இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இன்று மாலை (31) சந்தித்து பொப்பி மலர் அணிவித்தனர்.
அந்த வகையில் பொப்பி தினமானது முதலாம் உலக யுத்தத்தில் போரிட்டு உயி;ர் நீத்த படையினரை நினைவு கூறும் நோக்கில் இடம் பெறுவதுடன் இவ் வருடாந்த நிகழ்வானது 11ஆம் திகதி நவம்பர் மாதம் விஹார மகாதேவி பூங்காவில் நினைவு கூறப்படுகின்றது. இதன் முதற்கட்ட அங்கமானது கௌரவ ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
மேலும் இலங்கை முன்னால் இராணுவப் வீரர்கள் சங்கத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் உபுல் பெரேரா (ஓய்வு) அவர்களால் தளபதியவர்களின் காரியலாயத்தில் இராணுவத் தளபதியவர்களுக்கு பொப்பி மலரானது அணிவிக்கப்பட்டது. அதற்கமைய பிரதி உபகாரமாக இராணுவத் தளபதியவர்களால் இத் திட்டத்திற்கான பங்களிப்பு வழங்கப்பட்டது. அத்துடன் மேஜர் ஜெனரல் ஈ எம் எம் அபன்பொல (ஓய்வு) உள்ளடங்களாக இலங்கை முன்னால் இராணுவப் வீரர்கள் சங்கத்தினர் இராணுவத் தளபதியவர்களை சந்தித்து தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு தளபதியவர்களின் ஆசிகளைப் பெற்றனர்.
அந்த வகையில் உயிர் நீத்த படையினரை நினைவு கூறும் தினமான உலக பொப்பி தினத்திற்கான நிகழ்வுகள் அனைத்தும் விகார மகா தேவி பூங்காவில் இடம் பெறுவதற்கான அனைத்து ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வுகள் தொடர்பாகவும் இராணுவத் தளபதியவரகளுடன் கலந்துரையாடப்பட்டது.
மேலும் உலக பொப்பி தினமானது பிரபல்யமான கவிதையான இன் பிலென்டர் பீல்ட் எனும் கவிதையானது 1ஆவது உலக யுத்ததின் போது போர் களத்தில் மலர்ந்துள்ள மலர்கள் என குறிப்பிடப்படுகின்றது. மேலும் இம் மலரின் சிவப்பு நிறமானது போரின் போது சிந்திக் காணப்பட்ட குருதியின் நிறத்தைக் குறிக்கின்றது. |