இராணுவ தளபதியின் தலைமையில் ‘துரு சிரச’ மரநடுகைத் திட்டம்
18th October 2019
ஜனாதிபதி செயலகத்தின் வர்ணோப மரநடுகைத் திட்டத்தின் கீழ் ‘துருலிய வெனுவென் அபி ‘ எனும் தொணிப்பொருளின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக ‘துரு சிரச’ மரநடுகைத் திட்டமானது இன்று கிளிநொச்சியில் சிரச தொலைக்காட்சி ஊடக நிறுவன அனுசரனையில் இடம்பெற்றன.
இந்த மரநடுகைத் திட்டமானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் முழங்காவில், நாகபட்டவன் மற்றும் பூனாக்கரி வனாந்தர பகுதிகளில் இடம்பெற்றன.
இந்த மரநடுகைத் திட்டத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது தலைமையில் மாங்குளம் கல்வி வலையத்திற்குட்பட்ட மல்லாவி தேசிய பாடசாலை- 180, யோகபுர பாடசாலை – 100, பள்ளிநகர் மகா வித்தியாலயம் – 100, தேரக்கன்டால் அரச கலவன் பாடசாலை – 30, துனுக்காய் தமிழ் கலவன் பாடசாலை – 30 மற்றும் அனிச்சயன்குளம் தமிழ் கலவன் பாடசாலை -60 மாணவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றன.
அத்துடன் கிளிநொச்சி கல்வி வலையத்திற்கு கீழ் உள்ள முழங்காவில் தேசிய பாடசாலை – 300, நாச்சிகுடா முஸ்லீம் பாடசாலை – 150 மாணவர்களது பங்களிப்புடன் மரநடுகைத் திட்டமானது மேற்கொள்ளப்பட்டன.
இந்த மரநடுகை நிகழ்வுகளில் மதகுரு தலைவர்கள், சமூக சேவையாளர்கள் இணைந்திருந்தனர். |