இராணுவ தளபதியவர்கள் இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபனத்திற்குஅளித்தபேட்டி

4th October 2019

இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று வெள்ளிக் கிழமை (4) ஆம் திகதி இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ‘ஆராதித அமுத்தா’ (பிரதம விருந்தினர்) வானொலி நேரடி ஔிபரப்பு பேட்டி நிகழ்ச்சியில் இன்று காலை 9.00 மணியிலிருந்து 10 மணி வரை இணைந்து கொண்டார்.

இராணுவ தளபதியவர்கள் இந்த பேட்டியின் போது அவரது குழந்தை பருவம், பள்ளி நாட்கள், இவரது விளையாட்டு சாதனைகள், இளமையின் நினைவுகள், கெடட் கால அனுபவங்கள், இராணுவத்தின் இணைவு, இராணுவ பணிகள், தொழில் ரீதியான உயர்வு, இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பின்னடைவுகள், போர்க்களங்களின் வெற்றி, ஐக்கியநாட்டு பணிகள், இராஜதந்திர பணிகள், இராணுவத்தின் எதிர்கால பார்வை, உலகலாவிய முன்னேற்றத்துடன் இராணுவ வீரர்களின் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை அறிவை மேம்படுத்துதல், இவரது பொழுது போக்கான விடயங்கள், இசை குறித்த விடயங்களை பற்றி தெரிவித்தார்.

இந்த பேட்டியின் நேரடி ஔிபரப்பு வீடியோ காட்சியை ‘தேசத்தின் பாதுகாவலர்’ இராணுவ முகநூல் பக்கத்தில் காணலாம். |