பங்களாதேசத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு
2nd October 2019
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகாரலயத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி கொமடோர் சையத் மக்ஸுமுல் ஹக்கீம் அவர்கள் இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இம் மாதம் (2) ஆம் திகதி மாலை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விடயங்கள் தொடர்பாகவும் பயிற்சிகள் தொடர்பான விடயங்களையும் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின் இறுதியில் இவர்களது சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக இருவர்களுக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. |