இராணுவ தளபதியவர்கள் அபிமன்சல – 1 மத்திய நிலையத்திற்கு விஜயம்

1st October 2019

இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு ‘ஶ்ரீ மஹா போதிக்கு’ சமய சடங்கு நிகழ்வுகளுக்காக சென்றிருந்த இராணுவ தளபதியவர்கள் அனுராதபுரத்திலுள்ள அபிமன்சல – 1 மத்திய நிலையத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.

அங்கு சென்ற இராணுவ தளபதியவர்கள் இந்த மத்திய நிலையத்திலுள்ள 35 நோய் வாய்ப் பட்டிருக்கும் விஷேட தேவையுடைய படை வீரர்களை சந்தித்து அவர்களது நலன்களை விசாரித்து அவர்களுக்கு பரிசு பொதிகளையும் வழங்கி வைத்தார்.

பின்னர் இராணுவ தளபதியவர்கள் இந்த மத்திய நிலையத்திலுள்ள விஷேட தேவையுள்ள படையினர்களுடன் பகல் விருந்தோம்பலில் இணைந்து கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் அபிமன்சல – 1 மத்திய நிலையத்தின் கட்டளை தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். |