பொலிஸ் தலைமையகத்தில் இராணுவ தளபதிக்கு கௌரவ மரியாதைகள்

25th September 2019

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று காலை (25) ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார். இங்கு சென்ற இவரை பதில் பொலிஸ் மாஅதிபர் திரு சி. டீ விக்ரமரத்ன அவர்கள் வரவேற்றார்.

தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதி அவர்களுக்கு பொலிஸ் சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்பு பதில் பொலிஸ் மதஅதிபரின் பணிமனைக்கு இராணுவ தளபதி அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு சென்ற இராணுவ தளபதிக்கு பொலிஸ் தலைமையகத்தில் தலைமை பதவிகளிலுள்ள மூத்த பிரதிபொலிஸ் மாஅதிபர்களை பதில் பொலிஸ் மாஅதிபர் அறிமுகப்படுத்தி வைத்தார்.

பின்னர் பதில் பொலிஸ் மாஅதிபர் மற்றும் இராணுவ தளபதியவர்களுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன் போது பாதுகாப்பு தொடர்பான பொதுவான விடயங்கள் மற்றும் இரு திணைக்களங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு மேம்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டன.

இதன் பின்பு இருவர்களது இச்சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக இருவரினாலும் ஒருவருக்கு ஒருவர் நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர். இறுதியில் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் இராணுவ தளபதி அவர்கள் கையொப்பமிட்டு விடை பெற்றுச் சென்றார். |