படையினர் அனர்த்த பணிகளில் ஈடுபாடு

25th September 2019

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், கடற்படை, விமானப்படை, பொலிஸாருடன் இராணுவத்தினர் இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய தெற்கு மாகாணங்களில் அதிகரித்து வரும் பேரழிவு வெள்ள சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக இம் மாதம் (25) ஆம் திகதி காலையிலிருந்து தயார் நிலையில் உள்ளனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58 ஆவது படைப் பிரிவின் 170 படை வீரர்கள் அகுரஸ்ச பிரதேச செயலகத்திற்குட்பட்ட இம்புல்ஹொடையிலுள்ள அரம்பத் விகாரை, தெனியாய விஹாரஹேன, மொரவகையில் அமைந்துள்ள கொஸ்மோதர பழைய வைத்தியசாலை, ரடலங்காவ கம்புருபிடிய தலைமையகம், பத்தேகமையில் அமைந்துள்ள கிரிபட்டவில விகாரை, நெலுவ பிரதேச செயலகம், நாஹொட பிரதேச செயலகம், இமாடுவ விவேகராமய, பிடிகல பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கை பணியகத்தின் கட்டளைக்கமைய அனர்த்த பணிகளில் ஈடுபட்டனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களது தலைமையில் 581 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஒத்துழைப்புடன் இந்த அனர்த்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இம் மாதம் 24 ஆம் திகதி மாத்தறையிலுள்ள நடுகல பிரதேசத்திலும் நில்வலா கங்கையின் மூலம் ஏற்படவிருக்கும் வெள்ள பெருக்கு ஆபத்தை தடுக்கும் முகமாக 3 (தொ) கெமுனு காலாட் படையணியினரால் மண்மூட்டை அடைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வீழ்ச்சியுறும் நீரையும் சேர்த்து, பிரதான ஆற்றில் குவிந்து, வீக்கம் பெருகத் தொடங்கியதால், ஆற்றின் கரையோரம் பலப்படுத்தப்படாவிட்டால், முழுப் பகுதியும் பேரழிவு தரும் வெள்ளத்திற்கு அச்சுறுத்தப்படுவதனால். ஒரே இரவில் இந்த வெள்ளத் தடுப்பு பணிகள் ஆரம்பமாகி இன்று (25) ஆம் திகதி நிறைவடைந்தது. |