புதிதாக பதவியேற்ற விஷேட படையணியின் படைத் தளபதிக்கு இராணுவ மரியாதைகள்
8th September 2019
இராணுவ விஷேட படையணியின் புதிய படைத் தளபதியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தனது புதிய பதவியை நாவுலையில் உள்ள விஷேட படைத் தலைமையகத்தில் இம் மாதம் (7) ஆம் திகதி சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்னர் உத்தியோக பூர்வமாக பாரமேற்றார்.
விஷேட படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை இந்த படையணியின் மத்திய கட்டளை தளபதியான கேர்ணல் சந்திமால் பீரிஸ் அவர்கள் வரவேற்று பின்னர் படைத் தளபதிக்கு படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார்.
பின்னர் இராணுவ தளபதியவர்கள் படையினர் மத்தியில் விஷேட உரையொன்றையும் நிகழ்த்தி இறுதியில் குழுப் புகைப்படத்திலும் இணைந்து கொண்டார். |