விஷேட தேவையுடைய படை வீரர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற கதிர்காம யாத்திரை

26th July 2019

மொத்தமாக 129 விஷேட தேவையுடைய படை வீரர்களது பங்களிப்புடன் இடம்பெற்ற கதிர்காம யாத்திரையானது இம் மாதம் ஜூலை மாதம் 23 – 25 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவ புணர்வாழ்வு பணியகத்தின் பூரன ஏற்பாட்டுடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

அபிமங்சள 1, 11, 111 , நிலையங்கள், மிஹிந்து செத் மெதுரு மற்றும் றாகம ரணவிரு செவனையில் சுகையீனமிற்றிருக்கும் விஷேட தேவையுடைய படை வீரர்களது பங்களிப்புடன் கபுக் ருக் பூஜை, கிரிவேஹெரயிலும், கிரிபிந்து பூஜை தேவாலயத்திலும் இடம்பெற்று படையினரது பங்களிப்புடன் காவடி நடனங்களும் இடம்பெற்றது.

அத்துடன் கதிர்காம தேவாலயத்தில் இடம்பெற்ற விஷேட பூஜைகளிலும் இந்த விஷேட தேவையுடைய படை வீரர்களுடன் இராணுவ தளபதி இணைந்து கொண்டார். பின்னர் இந்த படையினருடன் இராணுவ தளபதி அவர்களது சுகசெய்திகளை கேட்டு உரையாடினார்.

இச்சந்தர்ப்பத்தில் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன, புணர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் W.S ராஜகருணா மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். |