வில்பத்து மரநடுகைத் திட்டத்திற்கு பாரிய அளவிலான ஒத்துழைப்பு வழங்கள்

14th June 2019

இராணுவத்தினரின் துருலிய வெனுவென் அபி எனும் மரநடுகைத் திட்டத்திற்கு அமைவாக ஆனந்தாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் 81ஆவது பிரிவினர் 5000 பெறுமதி மிக்க மரக் கன்றுகளை மற்றும் மண் தோண்டும் இயந்திரம் போன்றன இன்று மதியம் (14) இராணுவத் தளபதியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஆனந்தாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் 81ஆவது பிரிவின் தலைவரும் திட்டமிடல் ஒருங்கிணைப்பாளரான திரு சி ஆர் சேனாநாயக்க மற்றும் இதன் உப தலைவரான திரு நீல் குரே போன்றோர் மற்றும் இராணுவத் தளபதியவர்கள் போன்றோரிற்கு இடையில் கலந்துரையாடல் மேற்கொள்ளபட்டதுடன் இதன் போது 54ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார மற்றும் விவசாய மற்றும் வாழ்வாதார பணிப்பக பணிப்பாளரான பிரிகேடியர் புவனேக குணரத்ன அவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களின் தேபை;பாடுகளை பூர்த்தி செய்து தமது முழு உதவிகளையும் வழங்குவதாக இவர்கள் தெரிவித்தனர்.

இதன் போது இராணுவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் தமது கல்லூரி கடந்த கால சக மாணவர்களுக்கான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெவிரித்துள்ளார். இதன் போது இராணுவத் தளபதியவர்களுக்கு இவர்களால் மரக் கன்று மற்றும் மண்தோண்டும் இயந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. |