தேசிய கொடி காலிமுகத்திடலில் ஏற்றும் நிகழ்வு
3rd June 2019
தேசிய கொடி ஏற்றும் பணிகள் காலிமுகத்திடலில் இலங்கை இராணுவத்தினரால் 6 மாத காலம் மேற்கொள்ளப்படும். அதன் முதல் கட்ட நிகழ்வமானது இன்று காலை (3) ஆம் திகதி 3 இராணுவ வீரரின் பங்களிப்புடன் அணிவகுப்பு மரியாதையுடன் இடம்பெற்றன.
இலங்கை இராணுவத்தினால் ஆறு மாத காலமும் கடற்படை மற்றும் விமானப்படையினரால் மூன்று மாத காலங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மாதத்தின் முதலாம் திகதிகளில் அணிவகுப்பு மரியாதையுடன் இந்த கொடிகள் ஏற்றப்படும். இந்த நிகழ்வானது தேசிய ஞாபகார்த்த நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவ ஆளனி நிருவாக பணியகத்தின் பூரண ஏற்பாட்டுடன் இடம்பெறுகின்றது.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பணிப்புரைக்கமைய , இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன மற்றும் ஆளனி நிருவாக பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களது மேற்பார்வையின் கீழ் இந்த அணிவகுப்பு கொடி ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
ஒவ்வொரு நாளும் காலை 6.00 மணிக்கு இந்த கொடிகள் ஏற்றி பின்பு மாலை 6.00 மணிக்கு கொடிக் கம்பத்திலிருந்து இந்த தேசிய கொடிகள் இறக்கப்படும். |