இராணுவ போதிராஜா விகாரையில் உள்ள அரச மரத்திற்கு தங்கவேலிகள் அமைக்கப்பட்டன

4th December 2017

பனாகொட ஶ்ரீபோதிராஜா (இராணுவ விகாரையில்) அரச மரத்திற்கு அருகாமையில் தங்கவேலிகள் அமைத்து (3) ஆம் திகதி (போயா) பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இராணுவ தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

இராணுவ பௌத்த சங்கத்தின் தலைவர் மற்றும்மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்து போயா பௌர்ணமி நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இந்த தங்க வேலிகள் அமைக்கும் பணிகள் இராணுவ பௌத்த சங்கத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இராணுவ பொறியியலாளர் படையணியினால் இந்த தங்கவேலிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பிராக்மணகம துவ புராண விகாரையின் அதிபதி மற்றும் இலங்கை இராணுவ பௌத்த சங்கத்தின் அனுசாசக ஆதிபூஜ்ய பேராசிரியர் மாவுல்கொட சுமனரத்ன நாஹிம்பாணன் தேரரின் தலைமையில் விஷேட பௌத்த மத நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு கூடுதலான பக்தர்கள் கலந்துகொண்டு புத்தபெருமானின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டனர்.

|