பாகிஸ்தானின் புதிய உயர் ஸ்தானிகர் இராணுவத்தின் தளபதியை சந்திப்பு
30th November 2017
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட உயர் ஸ்தானிகர் டொக்டர் ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் இன்று மாலை (29) ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்ளை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
இராணுவ தளபதியுடன்; பேச்சுவார்த்தை நடத்திய போது, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் டாக்டர் ஷாஹித் ஹஷ்மத் இராணுவ தளபதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, இலங்கையுடன் இருதரப்பு மற்றும் இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்த தனது தயார் நிலையை வெளிப்படுத்தினார்.
இராணுவ பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்ன அவர்கள் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரை வரவேற்று இராணுவ தளபதியின் பணிமனைக்கு அழைத்து சென்றார்.
இவர்களது இந்த சந்திப்பின முடிவின் போது உயர் ஸ்தானிகரால் இராணுவ தளபதியின் பணிமனையில் உள்ள பிரமுகர்களின் வருகை புத்தகத்தில் கையொப்பமிட்டு நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டது.
ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் ஹிலால்-இ-இம்தியாஸ் மார்ச் மாதம் 1979 இல் பாகிஸ்தான் இராணுவத்தில் பணியாற்றி பின்பு கட்டளை, மற்றும் விரிவரையாளராக இருந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படைத்தளபதியாக ஹெய்டியில்; (1997-98) மற்றும் மிஷன் பிளானிங் ஆபிசர் மற்றும் பொறுப்பு அதிகாரியாகவும்; யுனைட்டெட் நேஷன்ஸ் செயலகம், நியு யார்க் -2001). அவர் ஒரு Ph.D. சர்வதேச உறவுகள் (2001) மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பணிகளிலும், 2014 ஆம் ஆண்டு கலாநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.
|