2017ஆம் ஆண்டிற்கான பரா விளையாட்டுப் போட்டிகள் நிறைவு

25th November 2017

யுத்தத்தின் போது போரிட்டு அங்கவீனமுற்ற இராணுவ விளையாட்டு வீரர்கள் 450 பேரது பங்களிப்போடு இடம் பெற்ற 2017ஆம் ஆண்டிற்கான பரா விiளாயட்டுப் போட்டிகள் கடந்த வெள்ளிக் கிழமை (24) நிறைவடைந்தது.

அந்த வகையில் கிட்டத் தட்ட 03நாட்களாக இடைவிடாது இடம் பெற்ற இப் போட்டி நிகழ்வானது பலவாறான போட்டி நிரல்களை உள்ளடக்கியதாகக் காணப்பட்டதுடன் 800ற்கு மேற்பட்ட அங்கவீனமுற்ற இராணுவப் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந் நிகழ்வில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் அழைப்பிற்கமைய கௌரவமிக்க பாதுகாப்புச் செயலாளரான கபில வைத்தியரத்தின அவர்கள் கலந்து கொண்டார்.

இவ் வகையில் வருகை தந்த பாதுகாப்புச் செயலாளர் அவர்களை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் மற்றும் இராணுவ பரா விளையாட்டுக் கழகத்தின் பணிப்பளாரான மேஜர் ஜெனரல் தம்பத் பெணாட்டோ போன்ரோர் வரவேற்றனர்.

இதன் போது பேண்ட் வாத்தியக் குழுவினரின் அழகிய சங்கமத்தோடு விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன் இந் நிகழ்வின் இறுதியில் 450இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.

இவ் விளையாட்டுகளில் சிறந்த வெற்றியை இலங்கை காலாட் படையணி சூடிக் கொண்டது.

மேலும் இப் போட்டிகளை திறம்பட தமது விளையாட்டு;த் திறமைகளை வெளிக் காட்டிய இராணுவ வீரர்களைப் பாராட்டிய இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் போன்ரோர் இவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.

இப் போட்டிகளிகளில் சக்கர நாற்காலி மற்றும் சைக்கில் ஓட்டப் போட்டிகள் மரதன் ஓட்டப் போட்டிகள் மேசைப் பந்து கால் பந்து கைப் பந்து நீச்சல் போட்டிகள் பெட்மிட்டன் பாரம் துக்கும் போட்டிகள் குண்டெரிதல் மற்றும் ஏயார் ரைபல் சூட்டுப் போட்டிகள் போன்றன இடம் பெற்றன.

அந்த வகையில் 2017ஆம் ஆண்டு ஜீலை மாதத்திலிருந்து இடம் பெறுகின்ற விளையாட்டுப் போட்டிகளில இப் பரா போட்டியானது சிறந்து காணப்படுகின்றது.

இராணுவ பரா விளையாட்டுக் கழகத்தின் பணிப்பளாரான மேஜர் ஜெனரல் தம்பத் பெணாட்டோ மற்றும் கேர்ணல் ராஜா குணசேகர அவர்கள் இப் போட்டிகளில் கலந்து கொண்டு திறமையாக விளையாடிய இராணுவ வீரர்களுக்கான பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பரா விளையாட்டுப் போட்டிகள் 2010ஆம் ஆண்டு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இதுவே இரண்டாம் முறையாக இடம் பெற்ற விளையாட்டுப் போட்டியாகக் காணப்படுகின்றது.

இப் பராப் போட்டிகளில் கொரியாவைச் சேர்ந்த இரு சர்வதேச விளையாட்டு வீரர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந் நிகழ்வில் பாரிய அளவிளான விளையாட்டு வீரர்கள் இராணுவ உயர் அதிகாரிகள் அவர்களது குடும்பத்தார் போன்ரோர் கலந்து கொண்டனர்.

|