இலங்கையில் தேசிய தௌஹீத் ஜமா அத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்ராஹீம் போன்ற அமைப்புகள் தடை
27th April 2019
மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆணைக்கு அமைய கடந்த சனிக் கிழமையன்று (27) தேசிய தௌஹீத் ஜமா அத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்ராஹீம் போன்ற அமைப்புகள் போன்றன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான வர்தமானி அறிவிப்பை ஜனாதிபதியவர்களின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது.
அதே வேளை இராணுவ தலைமையகம் பொது மக்களிற்கு படையினரின் தேடுதல் நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பை வழங்குமாறு தெரிவித்ததுடன் தேசிய தௌஹீத் ஜமா அத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்ராஹீம் போன்ற அமைப்புகள் போன்றவற்றின் உறுப்பினர்கள் தொடர்பான விபரங்கள் அறிந்திருப்பின் கீழ் காணப்படும் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
தொ.பேசி எண்கள்
இராணுவ உடனடிச் சேவைக்கான தொடர்புகள்
011 2434251
011 4055105
011 4055106
076 6911640
வெடிகுண்டு அகற்றும் படையினர்
011 2433335 |