இராணுவத்தினரது உதவியுடன் இடம்பெற்ற ‘திரிபிடகாபிஹிவந்தன’ நிகழ்வு

25th March 2019

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 11 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 200 இராணுவத்தினரது பங்களிப்புடன் கண்டி ஶ்ரீ தலதா மாளிகையில் ‘திரிபிடகாபிஹிவந்தன’ நிகழ்வு இம் மாதம் (23) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது பங்களிப்புடன் மல்வத்த அஸ்கிரிய மஹாநாயக தேரர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது 11 ஆவது படைப் பிரிவின் பூரன ஒத்துழைப்புடன் பௌத்த தேரர்கள் 4000 பேருக்கு ‘கிலன்பச’ தான வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, கடற்படைத் தளபதி, மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா, 11 ஆவது படைப் பிரவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஜே நாணாயக்கார மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இணைந்திருந்தனர். |