இராணுவ தளபதி மாலி நாட்டிற்கு கடமை நிமித்தம் கொண்டு செல்லும் உபகரணங்களை பார்வையிட்டார்

7th November 2017

இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க செவ்வாய்க் கிழமை (7) ஆம் திகதி இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு மாலி நாட்டிற்கு கொண்டு செல்லும் உபகரணங்களை பார்வையிட்டார்.

சுய நீடித்த உபகரணங்கள் ,போர் வாகன உபகரணங்கள்,மிதிவெடி அகற்றும் இயந்திரங்கள் போன்ற உபகரணங்களை பார்வையிட்டார்.

இராணுவ தளபதி ,இராணுவ உபகரண மாஸ்டர் ஜெனரல் மற்றும் இராணுவ நடவடிக்கை பணிப்பாளர் போன்ற மூத்த அதிகாரிகள் சென்று இந்த உபகரணங்களை சென்று பார்வையிட்டு இதன் தரம் தொடர்பாகவும் ஆராய்ந்து பார்த்தனர்.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ,ஜக்கிய நாட்டு சபையினால் விடுத்த சமாதான நடவடிக்கைகளின் நிமித்தம் இலங்கை இராணுவம் கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

மாலியில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் பல்வகைப்பட்ட ஒருங்கணைந்த நிலைப்படுத்தலுக்கான உதவியை வழங்குவதற்காகவும் ,பல பாதுகாப்பு தொடர்பான பணிகளைச் செயல்படுத்தும் பணிகளிலும் இலங்கை இராணுவம் செயற்படுவதாகும்.

லெபனான், சூடான் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் பணியாற்றும் பணியில் இதுவரை 16,000 அமைதி காக்கும் கடமைகளில் இலங்கை இராணுவம் ஈடுபட்டிருந்தது.

|