அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களது கலை வெளிப்பாடு
2nd November 2017
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் சுய ஆக்கவேலைப் பாட்டு பொருட்களை காட்சிப் படுத்தும் நிகழ்வானது இன்றய தினம் (01) கொழும்பு - 07 ஜெ டீ ஏ பெரோரா கலையரங்கில் இடம் பெற்றது.
அந்த வகையில் யுத்தத்தின் போது காயமடைந்து தமது உடல் அங்கங்களை இழந்த இராணுவ வீரர்களது திறமையை வெளி உலகிற்கு வெளிக்காட்டும் வகையில் கிட்டத் தட்ட 300ற்கும் மேற்பட்ட இவர்களது ஆக்கப்பாட்டுப் பொருட்கள் பொது மக்களின் கண்காட்சிக்காக வெளிக்காட்டப்பட்டது.
அந்த வகையில் இக் கண்காட்சியானது இராணுவத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ புணர்வாழ்பு பணியகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் சாந்த திருநாவுக்கரசு போன்ரோரின் பங்களிப்போடு இடம் பெறவுள்ளது.
இக் கண்காட்சியானது பொதுமக்களுக்காக இன்றய தினம் புதன் கிழமை (1) பி.ப 7.00 மணி முதல் வியாழக் கிழமை(2) பி.ப 9.00 மணிமுதல் மு.ப 10.00 வரை காட்சிப்படுத்தப்படும்.
அத்துடன் இக் கண்காட்ச்சியில் கலந்து கொண்ட இராணுவத் தளபதியவர்கள் இவ் இராணுவ வீரர்களது பொருட்களை பார்வையிட்டதுடன் இவர்களுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார்.
|