இலேசாயுத காலாட்படையணியின் மரணித்த படைவீரர்களின் நினைவு விழா

22nd October 2017

பயங்கரவாதிகளுக்கு எதிராக 30 ஆண்டுகளாக நடைபெற்ற கொடிய யுத்தத்தின் போது எமது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இலேசாயுத காலாட் படையணியின் படை வீரர்களின் நினைவு தின விழா 21ஆம் திகதி காலை இலேசாயுத காலாட் படையணியின் நினைவு துாபி வளாகத்தில் அனைத்து சமய தலைவர்களினது ஆசீர்வாத சமய அனுஷ்டானங்களுடன் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்களின் அழைப்பையேற்று பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக கலந்து கொண்டார். 1980 ஆம் ஆண்டு சிலோன் காலாட்படையணியாக இந்த படையணி ஆரம்பிக்கப்பட்டது பின்பு 1989 ஆம் ஆண்டு முழுமையாக இலேசாயுத காலாட் படையணியாக முழுமையாக்கப்பட்டது.

தெற்காசியாவில் மிக உயரமான நினைவு துாபியாக இந்த இலேசாயுத காலாட் படையணியின் நினைவு துாபி விளங்குகின்றது. இந்த நினைவு துாபி 2015 ஆம் ஆண்டு படைத் தலைமையகத்தினுள் அமைக்கப்பட்டன.

உயிர் நீத்த படை வீரர்களின் நினைவு துாபிக்கு இராணுவ தளபதி, இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி , இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், படை வீரர்கள் மற்றும் உயிர் நீத்த படை வீரர்களின் குடும்ப அங்கத்தவர்கள் இந்த நினைவு துாபிக்கு மலரஞ்சலி செலுத்தி கௌரவித்தனர்.

இந்த நிகழ்விற்கு முன்னாள் இராணுவ தளபதியான ஜெனரல் சாந்த கோட்டேஹொட மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் வருகை தந்து நினைவு துாபிக்கு மலரஞ்சலி செலுத்தி கௌரவித்தனர்.

|