இராணுவ தினத்தை முன்னிட்டு இறுதி சமய ஆசீர்வாத நிகழ்வுகள் பனாகொடையில்

9th October 2017

68 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இறுதி சமய ஆசீர்வாத நிகழ்வுகள் இராணுவ பௌத்த சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு (8) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பனாகொடையில் அமைந்துள்ள ஸ்ரீ போதிராஜாராமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் போது நாட்டிற்காக உயிர்நீத்த படை வீரர்கள், அங்கவீனமுற்ற படை வீரர்களை நினைவு படுத்தி சிறப்பான வழிபாடு பூஜைகள் இடம்பெற்றது.

இந்த பௌத்த சமய நிகழ்வுகள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. இந்த பௌத்த சமய பூஜைகள் கோட்டை ஸ்ரீ கல்யாணி தம்மா மஹா சங்கா சபையின் இத்தபானா தம்மஅலங்கார நாயக்க தேரர் மஹா சங்க தேரரின் தலைமையில் தர்மசாலா கூடத்தில் ஊர்வல அணிவகுப்புடன் இடம்பெற்றது. இந்த ஆசீர்வாத பூஜைகள் 9 ஆம் திகதி காலை வரை இடம்பெற்றது.

இராணுவ பௌத்த சங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த சமய நிகழ்விற்கு இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியான திருமதி சந்திரிகா சேனாநாயக்க வருகை தந்திருந்தார். மேலும் இராணுவத்தின் தரப்பில் இருந்து பிரதிநிதித்துவம் படுத்தி 1000 பேர் கலந்திருந்தனர்.

ஒன்பதாம் திகதி காலை கீல் தானம், சங்கீக தானம் நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இராணுவத்தினர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பத்தரமுல்லை நினைவு துாபியிலும் மிஹிதுசெத் மெதுருவிலும் இராணுவ தின நிகழ்வுகள் இடம்பெறும்.

|