பத்தரமுல்லை இராணுவ நினைவு தூபி வளாகத்தினுள் இராணுவ ஞாபகாரத்த நிகழ்வு
17th October 2018
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக ஞாபகார்த்த நிகழ்வு பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஞாபகார்த்த நினைவுத் தூபி வளாகத்தினுள் இடம்பெற்றது.
இந்த நிகழ்வானது 17 ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.
முப்பது வருட தசாப்த காலமாக எமது நாட்டில் ஏற்பட்டிருந்த பாரிய பிரச்சனைகளில் இருந்து எமது நாட்டை மீட்டெடுத்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை கௌரவடுத்தும் முகமாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
இந்த நிகழ்வின் போது இராணுவ மற்றும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு ரணபெர தாளங்களுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றன.
இந்த நினைவு தூபிகளுக்கு இராணுவ தளபதி உட்பட இராணுவ உயரதிகாரிகள் மலரஞ்சலிகளை செலுத்தி கௌரவத்தை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த படை வீர ர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ‘லாஸ்ட் போஸ்ட்’ கண்ணீர் அஞ்சலி நாதம் இசைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ , பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும் முப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். |