இராணுவத்தினரால் கிளிநொச்சி மக்களுக்கு வேலை வாய்ப்புகள்

13th September 2018

கிளிநொச்சி பிரதேசத்தில் குறைந்த வருமானத்தை பெறும் குடும்ப அங்கத்தவர்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் எம்ஏஎஸ் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத்துடன் ஒத்துழைப்புடன் (11) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நேர்முகப் பரீட்சைகள் இடம்பெற்றன.

இந்த நேர்முக பரீட்சைகள் கிளிநொச்சியிலுள்ள 572 ஆவது படைத் தலைமையகம், 6 ஆவது சிங்கப் படையணி, 14 ஆவது தேசிய பாதுகாப்பு படையணி முகாம்களில் இடம்பெற்றன. அதன் போது 163 விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றில் ஆண்கள் 98 பேரும் பெண்கள் 20 பேரும் உள்ளடக்கப்படுவர். இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பாக MAS ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின் பிரதிநிதிகளினால் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களது தலைமையில் இடம்பெற்றன. |