இராணுவ சிறந்த சைக்கிள் ஓட்டுனர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு
12th September 2018
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் (12) ஆம் திகதி கொழும்பு இலங்கை மின்சார பொறியியலாளர் படையணி தலைமையக அதிகாரி விடுதியில் இராணுவ சிறந்த சைக்கிள் ஓட்டுனர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை இராணுவ சைக்கிள் ஓட்டுனர் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் துமிந்த சிரினங்க அவர்களின் அழைப்பையேற்று இராணுவ தளபதி இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்து இராணுவ சிறப்பு ஓட்டுணர்கள் 6 பேருக்கு புதிய துவிச்சக்கர வண்டிகளை பரிசாக வழங்கி அவர்களை ஊக்குவித்தார்.
இந்த சைக்கிள்கள் 3 லட்சம் பெறுமதி வாய்ந்ததாகும். ‘இலங்கை டெலிகோமினால் நடாத்திய ‘சவாரிய’ சைக்கிள் ஓட்டுனர் 824 கிமீ போட்டியில் பங்கேற்றி சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த போர் வீரன் ஹிகான் புஸ்பகுமார, மற்றும் 175 கிமீ மகளீர்களுக்கான சைக்கிள் ஓட்டுனர் போட்டிகளில் பங்கேற்றி சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ மகளீர் படையணியைச் சேர்ந்த போர் வீராங்கனை உதேஷனி குமாரசிங்க அவர்களுக்கும் இராணுவ தளபதியினால் இந்த நிகழ்வில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும் மின்சார பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த கோப்ரல் ஹயான் குமார, மின்சார பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த கோப்ரல் துஷான் ராஜபக்ஷ, இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த போர் வீரன் துஷித சந்தருவன், இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த சுழல் துப்பாக்கி வீரர் சந்தருவன் பிந்து அவர்களையும் பாராட்டினார். |