இராணுவத் தளபதிக்கு பௌத்த மத ஆசிகள்
5th August 2017
புதிய இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் பௌத்த மத வழிபாட்டு ஆசிகளைப் பெற கண்டி ஸ்ரீ தளதா மாளிகை மற்றும் மல்வது அஸ்கிரிய விகாரைகளுக்கும் தமது விஜயத்தினை கடந்த வெள்ளிக்கிழமை (04) மேற்கொண்டார்.
இவ்வாறு தளதா மாளிகைக்கு சென்ற இராணுவத் தளபதியை தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெல பண்டார வரவேற்றதுடன் 22ஆவது இராணுவத் தளபதியவர்களின் கடமைப்பொறுப்பையேற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதலவது விஜயமாகவும் காணப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து மல்வது விகாரையின் தலைவரான பௌத்த தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள மகா நாயக்க இவ் விகாரையின் உப தலைவரான பௌத்த தேரர் திபுல்கந்தே விமலாந்த மற்றும் அஸ்கிரி விகாரையின் தலைவரான பௌத்த தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்தின அவர்களும் மேலும் தங்களது பௌத்த மத ஆசிகளை வழங்கினர்.
இந் நிகழ்வின் இறுதியில் இராணுவத் தளபதியினால் அட்டபிரிகரவும் வழங்கப்பட்டது.
|