குருணாகலில் அனைக்கட்டுகள் திருத்தும் பணிகளில் இராணுவத்தினர்
26th May 2018
கடந்த தினங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை நிமித்தம் பாதிப்புக்கு உள்ளான குருணாகல் அனைக்கட்டுகளை பசளை பைகளில் மண்நிரப்பி அனைக்கட்டுகளை சரியமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் (25) ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஈடுபட்டனர்.
532 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் தம்மிக ஜயசுந்தர அவர்களது தலைமையில் 8 ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த 25 இராணுவத்தினர் இந்த அனைக்கட்டு திருத்தியமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அத்துடன் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படை வீரர்களும் இந்த அனர்த்த பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த பணிகள் அனைத்தும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பணிப்புரையின் கீழ் இடம்பெற்றன.
|