தொம்பஹொடயில் அமைந்துள்ள இராணுவ போர்கருவி படையணியின் தொழிற்சாலையில் பாதணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பு

26th July 2017

ஹொரண, தொம்பஹொடவில் அமைந்துள்ள இராணுவ போர்கருவி படையணியின் தொழிற்சாலையில் பாதணிகள், தலைக்கவசங்கள், பேக் போன்ற பொருட்களை தயாரிக்கும் பணிகள் (25)ஆம் திகதி செவ்வாய்க கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை இராணுவ போர்கருவிச் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ரேணுக உடவத்த அவர்களின் அழைப்பிதலுக்கு இணங்க பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக வருகை தந்தார்.

இராணுவ தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கலாச்சார நடன குழுவினர் இராணுவ தளபதியை தொழிற்சாலை நுழைவாயிலிற்கு அழைத்து வரப்பட்டு தொழிற்சாலை புதிய திறப்பு மண்டபம் இராணுவ தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

இராணுவ உட்கட்ட வசதிகள் நவீனபடுத்தும் நோக்கத்துடன் இந்த புதிய தயாரிப்பு கிளை ஆரம்பிக்கப்பட்டது. மேலும் பிரிகேடியர் எச்.எல். குருகே அவர்களது தலைமையின் கீழ் எட்டு அதிகாரிகள் உட்பட 285 இராணுவத்தினர் இந்த பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இந்த புதிய தயாரிப்பு பொருட்கள் அனைத்தையும் இராணுவ தளபதி பார்வையிட்டு விஷேட பிரமுகர்களின் கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டார். பின்பு குழுப்படத்திலும் இணைந்து கொண்டு இராணுவத்தினருக்கு உறை நிகழ்த்தினார்.

இராணுவத்திற்கு தேவையான உபகரணங்களை தயாரிப்பதன் நிமித்தம் தொம்பஹொட இராணுவ போர்கருவி தொழிற்சாலை மற்றும் கொஸ்கமையில் அமைந்துள்ள இராணுவ தொழிற்சாலை 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

இராணுவ தளபதியினால் இராணுவத்தில் திறமையுள்ள நபர்களை தேர்ந்தெடுத்து ஆக்கப்பூர்வமான புதுமைகள் , நவீன தொழில் நுட்ப உருவாக்கம், உயர்தர தயாரிப்புகளை மேற்கொள்ளல் போன்ற திட்டங்களை மேம்படுத்துவது பிரதான நோக்கமாக அமைகின்றது.

|