யாழ் பிரதேசத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 30 வீடுகள்

9th April 2018

இராணுவத்தில் தற்போதைய இராணுவ தளபதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கட்டளை தளபதியாக கடமை புரியும் காலத்தில யாழ் குடாநாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்காக புதிய வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இதற்கு இணையாக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தெல்லிப்பலை பிரதேசத்தில் புதிதாக 30 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு (05)ஆம் திகதி வியாழக்கிழமை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொறியியளாலர்களின் பங்களிப்புடன் ஐந்து மாதங்களில் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டன. இவற்றின் மூலம் வீட்டு நிர்மாணபணிகளுக்காக தேவையான வசதிகள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், இந்து சமய விவகார அமைச்சு ஆகியவையினால் வழங்கப்பட்டன.

யாழ் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குறிய மாவை சேனாதிராஜ அவர்களினால் இந்த வீடுகள் திறந்து வைக்கப்ட்டது அதனைத் தொடர்ந்து வீட்டு உறிமையாளர்களுக்கு வீட்டு திறப்பும் வழங்கப்பட்டது. இதன்;போது; தெல்லிப்பலை பிரதேசத்தில் சுற்று பயணம் ஓன்றும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.

கடந்த தினங்களில் நல்லினக்கப்புரம் பிரதேசத்துக்கு விஜயத்தை மேற் கொண்ட இராணுவ தளபதி மற்றும் யாழ் மாவட்ட செயளாலர் மற்றும் பல பிரதான அதிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு; 25 வீடுகள் வீட்டு உரிமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ன.

இதேபோல் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் சில மாதங்களுக்கு முன்பு கீரpமலை குடிமக்களுக்கு ஒப்படைக்கப்பட்டது.

|