பத்தாவது பாதுகாப்பு சேவை போட்டிகள் ஆரம்பம்

5th April 2018

2018 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு சேவை விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு (3) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை பனாகொட இராணுவ உள்ளரங்க மைதானத்தில் இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அட்மிரல் ரவீந்திர சி விஜயகுணரத்ன மற்றும் பாதுகாப்பு சேவை சங்கத்தின் தலைவர் மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் பிரதான அதிதிகளாக வருகை தந்தனர்.

அத்துடன் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் கடற்படை பதவி நிலை பிரதானி ரியர் அட்மிரல் நீல் ரொஷயிரோ அவர்களை இராணுவ விளையாட்டு சங்கத்தின் தலைவர் மற்றும் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்கள் வரவேற்றனர்.

பின்பு பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் முப்படையைச் சேர்ந்த தளபதிகள் தேசிய கொடி மற்றும் முப்படைகளின் கொடிகளை ஏற்றி வைத்தனர். அதனை தொடர்ந்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இராணுவ விளையாட்டு சங்கத்தின் தலைவர் மற்றும் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்கள் இந்த நிகழ்வில் வரவேற்புரையை நிகழ்த்தினார். அதன் பின்பு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி முப்படைகளது விளையாட்டு வீரர்களின் பங்களிப்புடன் இந்த போட்டிகள் ஆரம்பமானது.

இந்த போட்டிகளில் பெட்மின்டன், வலைப் பந்தாட்டம், கிரிக்கட், கபடி, கராட்டி, படகோட்டம், ரக்பி, கால்பந்தாட்டம், நீச்சல், ஸ்கோச், மேசைப் பந்து, தண்ணீர் பந்து, பாரம் தூக்குதல், ஜிம்னாஸ்டிக், வுசு போன்ற போட்டிகளுடன் 1000 முப்படையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் பங்களிப்புடன் இந்த போட்டிகள் ஆரம்பமானது.

|