இராணுவத்தினரால் புணரமைக்கப்பட்ட கோயிலுக்கு இராணுவ தளபதி வருகை
4th April 2018
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 100 கோயில் அமைக்கும் திட்டத்தின் கீழ் 20 ஆவது புணரமைக்கப்பட்ட தெல்லிப்பளை முத்துமாரி அம்மன் கோயிலுக்கு இராணுவத்தினரால் உதவிகள் செய்யப்பட்டன.
இந்த ஆலயத்தின் விஷேட பூஜைக்கு மார்ச் மாதம் (30) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் , புனரமைக்கப்பட்ட இந்த ஆலயத்திற்கு வருகை தந்து பூஜையிலும் கலந்து கொண்டனர்.
இந்து பக்தரான பாரதி குமாரசுவாமி அவரது நிதி அனுசரனையுடன் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இந்த கோயில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மே மாதம் 2009 ஆம் ஆண்டு குடா நாட்டில் உள்ள மனிதாபிமான நடவடிக்கைகளின் நிமித்தம், பல கோயில்கள் , தலங்கள் மறுசீரமைப்பு பணிகள் இராணுவத்தினரின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டன. இந்த பணிகளுக்க யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் , வண்ணப்பூச்சுகள், சிமெண்ட், மணல், மூலப்பொருட்களை போன்றவைகள் இந்த கோயில் அமைக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்டன.
|