இந்திய உயர் ஆணையாளர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு
18th July 2017
இலங்கையில் அமைந்துள்ள இந்தியா ஆணையாளர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அசோக் ராவோ இன்று (18)ஆம் திகதி காலை இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களை உத்தியோக பூர்வமாக சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான முக்கியமான விடயங்கள், இராணுவ பயிற்சி, திறமை முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இறுதியில் இராணுவ தளபதியினால் பாதுகாப்பு ஆலோசகருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்தியா உயர் ஆணையாளர் அலுவலகத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ஜி.எஸ் க்லேயார் மற்றும் இராணுவ சேவை பணியகத்தின் கேர்ணல் உதய குமார இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
|