இராணுவத்தினர் கண்டி பிரதேசத்தில் துப்பரவு பணிகளில்
2nd April 2018
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது வழிக் காட்டலின் கீழ் 11 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கண்டிப் பிரதேசத்தில் துப்பரவு பணிகளை இராணுவத்தைச் சேர்ந்த 150 படை வீரர்கள் மார்ச் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை மேற்கொண்டனர்.
11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது தலைமையில் கண்டி மற்றும் குருணாகல் நகர பிரதேசத்தில் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக .அவர்களது பணிப்புரைக்கமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியினால் இந்ந பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் சிவிலியன்களின் பங்களிப்புடன் ஹரிஸ்பத்துவ பிரதேச செயலகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
புதன் கிழமை (28) ஆம் திகதி திகன,கேகாலை வீதி இரு பக்கங்களிலும் படையினர் குண்டசாலை பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.
கண்டி மாவட்டத்தில் உள்ள திகன, அகுரன, கலகா, கடுகஸ்தொட,மெனிக்கின்ன, அம்பதென்ன, பூஜாபிடிய போன்ற பிரதேசங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இராணுவத்தினர் தங்களது இயந்திர வாகனங்களை பயண்படுத்தி இந்த பணிகளை மேற்கொண்டிருப்பதால் அரசு மற்றும் நகராட்சி மன்றத்திற்கு செலவு மீதியாயிருந்த்து.
|