12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 17 வது ஆண்டு நிறைவு
10th December 2024
12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி தனது 17 வது ஆண்டு நிறைவை 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் வீபிடீகே கொடித்துவக்கு ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ சம்பிரதாயத்திற்கமைய 2024 டிசம்பர் 03 அன்று கொண்டாடியது.
பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் ஆண்டு நிறைவு விழா ஆரம்பமானதுடன் அதனைத் தொடர்ந்து குழுபடம் மற்றும் அனைத்து நிலையினருடனான மதிய விருந்துபசாரமும் இடம்பெற்றது. வற்றாப்பளை, கண்ணகி அம்மன் கோவிலில் கொடி ஆசீர்வாதம் மற்றும் முகாம் வளாகத்தில் நடத்தப்பட்ட போதி பூஜை உள்ளிட்ட சமய அனுஷ்டானங்கள் நிகழ்விற்கு ஆன்மீக முக்கியத்துவத்தை சேர்த்தன.
நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.