24 வது காலாட் படைப்பிரிவின் 11 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள்

7th December 2024

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூஎல்ஏசி பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 24 வது காலாட் படைப்பிரிவு அதன் 11 வது ஆண்டு நிறைவினை 2024 ஒக்டோபர் 26 அன்று கொண்டாடியது.

கொண்டாட்டங்கள் போதி பூஜையுடன் ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து பதினொரு முதியவர்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மல்வத்தை விளாவடி விநாயகர் கோவிலில் பூஜையும், அம்பாறை புனித இக்னேஷியஸ் தேவாலயத்தில் வழிபாடும் நடைபெற்றது.

12 நவம்பர் 2024 அன்று படைப்பிரிவு தலைமையகத்தின் கிளைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியுடன் விழாக்கள் ஆரம்பமாகின. 2024 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி அம்பாறையில் உள்ள முதியோர் இல்லத்திற்கான தானம் வழங்கும் நிகழ்வுடன் கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.