இயந்திரவியல் காலாட் படையணியில் படையினருக்கான புதிய தங்குமிட கட்டிடம் திறந்து வைப்பு
2nd December 2024
இயந்திரவியல் காலாட் படையணியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்குமிட கட்டிடம் 29 நவம்பர் 2024 அன்று 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இத்திட்டம் படையணியில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுக்கான நீண்டகால தேவையை நிவர்த்தி செய்வதாகும். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.