11 வது காலாட் படைப்பிரிவினரால் உலர் உணவு பொதிகள் விநியோகம்
21st November 2024
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஏயூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சி 18 நவம்பர் 2024 அன்று பல்லேகலை 11 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் போது, 11 வது காலாட் படைப்பிரிவு, அதன் கட்டளை பிரிகேட்கள் மற்றும் படையலகுகளில் பணியாற்றும் படையினர் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு 15 உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அரச ஊழியர்கள் கலந்துகொண்டனர்.