புதிய இராணுவ தளபதிக்கு பொறியியலாளர் படையணியினரின் அணிவகுப்பு மரியாதை

13th July 2017

புதிய இராணுவத் தளபதிக்கு இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் படையணியினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதையானது பனாகொடையில் இராணுவத் தலைமையத்தில் வியாழக் கிழமை (13) இடம் பெற்றது.

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இலங்கை இராணுவ பல்கலைக் கழகத்தில் கற்கைநெறியை நிறைவு செய்த இவர் 1989ஆம் ஆண்டு தமது இராணுவ பொறியியலாளர் படையணியில் இணைந்துள்ளார்.

இத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்கள் தளபதியை வரவேற்றதோடு மேலும் யுத்தத்தின் போது உயிர் தியாகம் செய்த இராணுவ பொறியியலாளர் படையணியின் போர் வீரர்களுக்கான நினைவஞ்சலியினையும் தளபதி வழங்கினார்.

இப் படையணியின் படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டதுடன் தளபதியவர்களால் இந் நிகழ்வில் கலந்து கொண்ட இராணுவ படையினருக்கான உரையாற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதிய தளபதியின் வருகையினை முன்னிட்டு; புகைப் படங்களும் எடுக்கப்பட்டதுடன் நிர்மானிக்கப்பட்டுக் கொண்டிருந்த இத் தலைமையக மண்டபத்தின் பணிகளையும் பார்வையிடச் சென்றார்.

இத் தலைமையத்திலிருந்து வெளியேறும் வேளை அழைப்பினர் புத்தகத்தில் தமது கையொப்பத்தையும் இட்டார்.

இந் நிகழ்வில் பொறியிலாளர் படையணியின் உயர் அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

|