4 வது இலங்கை சிங்க படையணியின் 39 வது ஆண்டு நிறைவு விழா
5th December 2024
4 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்எம்பீகே பண்டார ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஏஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2024 டிசம்பர் 1 அன்று தனது 39 வது ஆண்டு நிறைவு விழாவை இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடியது.
இந்த கொண்டாடத்தின் போது சம்பிரதாயத்திற்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை, படையலகு அணிவகுப்பு மரியாதை, மரக்கன்று நாட்டல், குழு படம் எடுத்தல் மற்றும் அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்து போன்றன இடம்பெற்றன. ருஹுணு கதிர்காம விகாரையில் கொடி ஆசீர்வாதம் உட்பட, தொடர்ச்சியான சமய அனுஷ்டான நிகழ்வுக்கு முன்னதாக, கதிர்காம கோவில், கண்டி தலதா மாளிகை, மற்றும் அனுராதபுர ஜய ஸ்ரீ மஹா போதியில் 25 நவம்பர் 2024 அன்று போதி பூஜை நிகழ்வும் இடம்பெற்றது.
நவம்பர் 29 அன்று நெல்லியடி ஸ்ரீ பரமானந்த சிறுவர் இல்லம் மற்றும் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன. ஆண்டு நிறைவு விழாவில் கயிறு இழுத்தல், கபடி, கிரிக்கெட் மற்றும் அணிநடை போட்டிகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இடையேயான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.