கெமுனு ஹேவா படைத் தலைமையகத்தில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு
22nd March 2018
இரத்தினபுரி குருவிட்டையில் அமைந்துள்ள கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் புதிய கட்டிடம் மற்றும் படை வீரர்களின் விடுதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் (21) ஆம் திகதி காலை திறந்து வைக்கப்பட்டது.
புதிய இரண்டு மாடி கட்டிட விடுதி கெமுனு ஹேவா படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவ தளபதி அவர்கள் வருகை தந்து ரிபன் வெட்டி திறந்துவைத்தார்.
இந்த கட்டிட திறப்புக்கு வருகை தந்த பிரதம அதிதியை கெமுனு ஹேவா படைத் தளபதி வரவேற்றார். பின்பு பிரதம அதிதி கண்டியன் கலாச்சார நடன குழுவினரால் வரவேற்று அழைத்து செல்லப்பட்டார்.
பின்பு இராணுவ தளபதியினால் படைத் தலைமையக வளாகத்தினுள் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றன.
பின்பு இராணுவ தளபதி கெமுனு ஹேவா படைத் தலைமையக வளாகத்தினுள் அமைந்துள்ள நினைவு தூபி நிலையத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தி கௌரவத்தை செலுத்தினார்.
பின்பு இராணுவத்தினர் மத்தியில் இராணுவ தளபதி உறையை ஆற்றினார். அவ் உறையின் போது கெமுனு ஹேவா படையணியினரது செயற்பாடு மற்றும் விளையாட்டு துறைகளில் அவர்கள் ஆற்றிய திறமைகளை பாராட்டி உறையாற்றினார்.
பின்பு கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியினால் இராணுவ தளபதியின் வருகையை முன்னிட்டு இராணுவ தளபதிக்கு நினைவு சின்னமொன்றை வழங்கி வைக்கப்பட்டது.
பின்னர் இராணுவ தளபதியினால் கெமுனு ஹேவா படையணி தலைமையகத்திலுள்ள பிரமுகர்கள் வருகை புத்தகத்தில் கையொப்பமிட்டார்.
|