புதிய இராணுவ தளபதிக்கு பிரதமரின் வாழ்த்துக்கள்
13th July 2017
இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக கடமையேற்றதன் பின்பு புதன்கிழமை (12)ஆம் திகதி காலை அலரிமாளிகையில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்தார்.
புதிய இராணுவ தளபதியை பிரதமர் அலரிமாளிகையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்த போது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தார். இராணுவ தளபதி லெப்டினன்ட ஜெனரல் மகேஷ் சேனநாயக யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதியாக இருந்த காலகட்டத்தில் கூடுதலான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டார் என்று பிரதமர் கௌரவித்தார்.
பிரதமரோடு இராணுவ தளபதி உறையாடும்போது நாட்டின் இறைமை பாதுகாப்பிற்கு எனது சிறந்த அற்பணிப்பை வழங்கி இராணுவத்திற்கு சிறந்த பயிற்சிகள் வழங்கி அவர்களை வலுவடையச் செய்யக் கூடிய நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று கூறினார்.
இறுதியில் பிரதமரினால் நினைவுச் சின்ன பரிசு இராணுவ தளபதிக்கு வழங்கப்பட்டது.
|