மத்திய பாதுகாப்புப் படையினால் உலர் உணவு பொதிகள் நன்கொடை திட்டம்
20th November 2024
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சியை 13 நவம்பர் 2024 அன்று தியத்தலாவ கோல்ப் கழகத்தில் நடாத்தியது.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத் ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் போது, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பணிபுரியும் இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு 30 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.