2 வது (தொ) இலங்கை சிங்க படையணியினால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

14th November 2024

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினர் கண்டி, அக்குறணையில் குறைந்த வருமானமுடைய குடும்பம் ஒன்றிற்கான புதிய வீட்டை நிர்மாணித்தனர்.

இந்த வீடமைப்புத் திட்டமானது, கோணகலகல ஸ்ரீ விஜித மகா விகாரை மற்றும் ஸ்ரீ சதானந்த மகா பிரிவேனாவின் பிரதமகுரு வண. சாரத தேரர் மற்றும் உள்ளூர் நன்கொடையாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்டது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களினால் 11 நவம்பர் 2024 அன்று பயனாளியிடம் வீடு அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேசவாசிகள் வீடு திறப்பு விழாவில் பங்கேற்றனர்.