கண்டிக்கு அரசாங்க உயர் பிரதிநிதிகள் வருகை

10th March 2018

கண்டி மாவட்டத்தில் தற்போதைய நிலைமைகளை பார்வையிடுவதற்காக கௌரவத்திற்குரிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அரச உயர் கூட்ட பிரதிநிதிகள் (10) ஆம் திகதி கண்டிக்கு வருகை தந்தனர்.

கௌரவத்திற்குரிய பிரதமர் திகன பிரதேசத்திற்கு உயர் அமைச்சு குழு, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களுடன் கலவரம் இடம்பெற்ற இடத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

பின்பு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

அத்தடன் சபாநாயகர் தலைமையிலான அரசியல்வாதி பிரதிநிதிக்குழு மல்வத்த மற்றும் அஸ்கிரிய தலைமை பெளத்த மதகுருமார்கள் மற்றும் கண்டி மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தைகளின் போது இராணுவ தளபதியும் கலந்து கொண்டார்.

|