ஜப்பானின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அட்மிரல் கவானோ தேசிய இராணுவ நினைவு தூபிக்கு வருகை

10th March 2018

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட ஜப்பான் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அட்மிரல் கவானோ கொழும்பு விஹாரமாதேவியில் அமைந்துள்ள தேசிய இராணுவ நினைவு தூபிக்கு (9) ஆம் திகதி வருகை தந்து தனது தனது கௌரவ அஞ்சலியை செலுத்தினார்.

ஜப்பான் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியை இலங்கை இராணுவ பொலிஸார் இராணுவ மரியாதையுடன் அழைத்து சென்று நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்கள் நிமித்தம் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த நினைவு தூபிகளுக்கு ஜப்பான் பிரதிநிதிகளும் தங்களது அஞ்சலிகளை தெரிவித்தனர்.

இராணுவ சம்பிரதாய முறைப்படி லாஸ்ட் போஸ்ட் நாதம் இசைத்து இலங்கை இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளுடன் பங்களிப்புடன் ஜப்பான் பாதுகாப்பு பதவி நிலை உத்தியோகத்தர் தனது அஞ்சலிகளை செலித்தினார்.

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட ஜப்பான் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி இலங்கையிலுள்ள மிக முக்கிய பிரமுகர்களை சந்திப்பதற்கு உள்ளார்.

|