விஜயபாகு காலாட் படையினருக்கு ‘ஆரியா நிதி ‘ உதவியுடன் ‘உதாரி ஓப’ திட்டத்தில் உதவிகள்

7th March 2018

‘ஆரிய நிதிய அமைப்பினால்’ விஜயபாகு காலாட் படையைச் சேர்ந்த ‘மனநலம், உடல் நலம் குன்றியவர்களுக்கு அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு (3) ஆம் திகதி சனிக் கிழமை போயகன‘ த சலூட்’ மண்டபசாலையில் இடம்பெற்றது.

செயல்திறன் மற்றும் உள்ளுணர்வு திறன்களில் பெரும்பாலும் ஊனமுற்றோர் மற்றும் மற்றவர்களிடமிருந்து கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம், அவர்களின் ஒழுக்க நெறிகளை மேம்படுத்துவதற்காக, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்பு விஜயபாகு காலாட் படைத் தளபதி போர் வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்த 'அரியா நிதியத்தின் அனுசரனையுடன் விஜயபாகு காலாட் படையின் அவயங்களை இழந்த படை வீரர்களுக்கு ஊன்றுகோல்கள், செயற்கை மூட்டுகள் மற்றும் பிற மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன். இந்த நிகழ்வின் போது பாடநெறிகளில் திறமைகளை வெளிக் காட்டிய 11 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை உள்ளடக்கிய புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சாந்த கோட்டேகொட , ஆர்யா அறக்கட்டளையின் நிறைவேற்று உத்தியோகத்தர் திரு சிருத் கிரில்லா, நடிகர்கள், பல தொழில் மற்றும் வர்த்தகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

நிகழ்வின் இறுதியில் நன்றியுறையை விஜயபாகு காலாட் படைத் தளபதி ஆற்றினார்.

இந்த நிகழ்வில் விஜயபாகு தலைமையகத்தின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் ஸ்ரீநாத் ஆரியசிங்க மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

|