பொலிஸாருக்கு உதவுவதற்காக கடமைகளில் இராணுவத்தினர் உசார் நிலையில்

5th March 2018

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வேண்டுகோளின் பேரில், தெல்தெனிய பிரதேசத்தில் (05) ஆம் திகதி பகல் ஏற்பட்ட பதட்ட நிலையை தனிப்பதற்காக பொலிஸாருக்கு உதவுவதற்காக பாதுகாப்பு கடமைகளில் 200 இராணுவத்தினர் உசார் நிலையில் உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸாரினால் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் 11 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் கடமை புரியும் 200 இராணுவத்தினர் இந்த பாதுகாப்பு பணிகளுக்காக உசார் நிலையில்வைக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 6.00 மணி தொடக்கம் நாளை காலை 6.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

|