இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்ட பொலன்னறுவை தாதி விடுதி திறந்து வைப்பு

5th March 2018

‘ரஜரட நவோதய’ திட்டத்தின் கீழ் ‘பொலன்னறுவை எழுச்சி’ மாவட்ட அபிவிருத்தியின் நிமித்தம் மெதிரிகிரிய தள வைத்தியசாலையில் தாதி விடுதிகள் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நிர்மானிக்கப்பட்டன. இந்த கட்டிடம் (01) ஆம் திகதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில் மின்னேரியவில் இடம்பெற்றது.

‘பொலன்னறுவையின் எழுச்சி’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கட்டிட நிர்மானிப்பிற்காக 28,47 மில்லியன் ரூபாய் மதீப்பீடு செய்யப்பட்டுள்ளது. 12 ஆவது இராணுவ எந்திரிகள் சேவை படையணியினால் இந்த கட்டிட நிர்மானிப்புகள் 10 மில்லியன் ரூபாயில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 2015 ஆம் ஆண்டு ஆரம்பமாகி 2017 ஆம் ஆண்டு முடிவடைந்துள்ளது. ‘பொலன்னறுவையின் எழுச்சி’ மாவட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையில் இந்த பணிகள் இடம்பெற்றன.

புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு வடக்கு மத்திய மாகாண ஆளுனர் கௌரவத்திற்குரிய பி.பீ திசாநாயக’ பொலன்னறுவையின் எழுச்சி’ மாவட்ட அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, சுகாதார அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளது பங்கேற்புடன் இந்த கட்டிடங்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

(புகைப்படம் : சனாதிபதி ஊடக பிரிவு)

|