ஐ.நா ஒருங்கிணைப்பு அதிகாரியின் இறுதிக் கிரிகைகளில் கலந்து கொண்ட இராணுவத் தளபதி

2nd March 2018

சில தினங்களுக்கு முன்னர் காலமடைந்த இலங்கை ஐ.நாவின் திட்டமிடல் அபிவிருத்தி அதிகாரியூம் இலங்கைக்கான ஐ.நாவின் ஒருங்கிணைப்பாளருமான செல்வி உனா மக்கிளவ்வூளி அவர்களின் இறுதிக் கிரிகைளில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இன்று மதியம் (2) கலந்து கொண்டார்.

பொரல்லை பாலுhரில் இடம் பெற்ற இவ் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இவர்களது அயலவரான ஐநாவின் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியான திரு லால் விஜேகுணவர்தன அவர்களிடம் கலந்துரையாடலை மேற்கொண்டு தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் முகமாக புத்தகத்திலும் தமது கருத்தைக் குறிப்பிட்டார்.

அந்த வகையில் செல்வி உனா மக்கிளவ்வூளி அவர்கள் தமது சுகயீன விடுமுறையில் வெள்ளிக் கிழமை (23) இருந்த வேளை மரணத்தைத் தழுவியூள்ளார். அந்த வகையில் மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்கள் மற்றும் பிரதம மந்திரியவர்கள் போன்றௌர் ஐநாவின் காரியாலயத்தில் கடந்த கிழமை விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இவரது இறுதிச் சடங்கானது இன்று மாலை (2) பொரல்லையிலுள்ள மயானத்தில் நடைபெறும்.

|