வெல்லவாய பிரதேசத்தின் தீயணைப்பு பணிகளில் படையினர்

2nd March 2018

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையத்தின் 12ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 121ஆவது படைப் பிரிவின் 9ஆவது இராணுவ சிங்கப் படையணி மற்றும் 5 ஆவது கெமுனு ஹேவா படைப் பிரிவிலும் 75 க்கு மேற்பட்ட படையினர்களால் வெல்லவாய பிரதேசத்தின் கிராமசேவக பிரிவின் அணபல்லகம பிரதேசத்தில் உள்ள குருமினியாஹல மலையில் கடந்த புதன் கிழமை (19) ஆம் திகதி தீ திடீரென ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் படையினர் செயற்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இப் படையினர் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 12ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிசாந்த வன்னியாராச்சி மற்றும் 121ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் நலின் கொஸ்வத்த அவர்களின் ஆலோசனையின் கீழ் 9ஆவது இராணுவ சிங்கப் படையணி மற்றும் 5 ஆவது கெமுனு ஹேவா படையணியின் 75 அதிகாரிகளும் படையினரும் இப் பிரதேசத்தில் தீ அணைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை (1)ஆம் திகதி இராணுவத்தினரால் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக 400 ஏக்கர் நிலப்பரப்பு அழிக்கப்பட்டதுடன் சிவில் சொத்துகளுக்கும் பொது கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படவில்லை.

|