24 வது காலாட் படைப்பிரினால் புதிய வாகன தரிப்பிடம் நிர்மாணிப்பு
20th October 2024
24 வது காலாட் படைப்பிரிவு படையினர் 2024 ஒக்டோபர் 16 அன்று 24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூஎல்ஏசி பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புதிய வாகன தரிப்பிடத்தை நிர்மாணித்தனர்.
அதன் திறப்பு விழாவில் 24 வது காலாட் படைப்பிரிவு தளபதி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்த வாகன தரிப்பிடம் அதன் பொறுப்பு பகுதியில் உள்ள இராணுவ வாகனங்கள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.