தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2024 இலங்கை இராணுவம் வெற்றி

23rd October 2024

இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தினால் ஒக்டோபர் 17 முதல் 18 ஆம் திகதி வரை பண்டாரகம உள்ளக விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் - 2024 இல் இலங்கை இராணுவம் வெற்றி பெற்றது.

31 விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றிய இந்தப் போட்டியானது 35 வெவ்வேறு நிகழ்வுகளில் நடத்தப்பட்டது. இலங்கை இராணுவ வீராங்கனைகள் இப்போட்டியில் சிறந்த திறன்களை வெளிகாட்டி 28 தங்கப் பதக்கங்களையும், 26 வெள்ளிப் பதக்கங்களையும், 30 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை இராணுவ கராத்தே குழுவின் உப தலைவர் பிரிகேடியர் ஆர் டி சலே என்டிசி அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இராணுவ அணி இந்த போட்டியில் கலந்து கொண்டது.